< Back
மாநில செய்திகள்
வேளாண்மை பற்றி வலைதளத்தில் பதிவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
கரூர்
மாநில செய்திகள்

வேளாண்மை பற்றி வலைதளத்தில் பதிவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
23 April 2023 12:06 AM IST

வேளாண்மை பற்றி வலைதளத்தில் பதிவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நச்சலூர் சமுதாய கூடத்தில் வேளாண் அடுக்ககம் கிரேயின்ஸ் வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி ஏணி சுந்தரம் தலைமை தாங்கினார். நங்கவரம் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். நங்கவரம் தெற்கு 2 கிராம நிர்வாக அலுவலர் சசிகலா வரவேற்று பேசினார். முகாமில் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை உள்பட 13 துறைகளில் இருந்து தமிழ்நாடு அரசு அளித்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒரே இடத்தில் பதிவு செய்ய ஏதுவாக வேளாண் அடுக்ககம் கிரேயின்ஸ் வலைதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்களது நில விவரங்களுடன் விவசாயிகளின், விவரங்களையும் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பட்டா ஆகிய ஆவண நகல்கள் மற்றும் புகைப்படம், கைபேசி எண் உள்பட ஆவணங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.

மேலும் செய்திகள்