< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கஞ்சா விற்பனை தடுப்பு விழிப்புணர்வு
|8 May 2023 12:30 AM IST
பழனி பஸ்நிலையத்தில் போலீசார் சார்பில் கஞ்சா விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் துறை சார்பில் 'கஞ்சா வேட்டை 4.0' என திட்டம் தொடங்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பழனி போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று பழனி பஸ்நிலைய பகுதியில் டவுன் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் முனியராஜ் தலைமையிலான போலீசார் பக்தர்கள், பயணிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். மேலும் யாரேனும் கஞ்சா விற்பனை செய்தால் அவர்களை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.