சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்
|சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சென்னை,
நேரு யுவகேந்திரா சங்கதன் மாநில இயக்குநரகம் சென்னை, நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநரகம் சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் மாநில அளவிலான தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாப் போட்டிகள் எம் ஐ டி சென்னை வளாகத்தில் நேற்று நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது,
சமூகப் பிரச்சனைகளை கண்டறிந்து விவாதித்தல், அவற்றை பதிவு செய்வது, அது சார்ந்த முடிவுகளை எடுத்துச்செல்வது ஆகியவை இந்த தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என பேசினார். சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் எனவும் நல்ல சமூக அமைப்பை கட்டமைத்து மேம்படுத்துவதற்கு இளைஞர் நாடாளுமன்ற அமைப்பு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் எனவும் இதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்டுள்ள 78 போட்டியாளர்களிடமிருந்து முதல் மூன்று பரிசுகளை பெறுபவர்கள் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதி தேசிய நாடாளுமன்ற போட்டிகளுக்கு அனுப்பப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம், இரண்டாவது பரிசு ஒரு லட்சத்து 50 ஆயிரம், மூன்றாவது பரிசு ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும்.
நிகழ்வில், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு ஹசன் மௌலானா, என்எஸ்எஸ் மண்டல இயக்குனர் டாக்டர் சி சாமுவேல் செல்லையா, நேரு யுவ கேந்திரா சங்கதன் மாநில இயக்குனர் திரு. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.