கோயம்புத்தூர்
சிறுதானிய நன்மை குறித்து விழிப்புணர்வு
|சுல்தான்பேட்டையில் சிறுதானிய நன்மை குறித்து விழிப்புணர்வு நடந்தது.
வேளாண் துறையின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. பிரசாரத்தில் சிறுதானியம் உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள், உற்பத்திக்கான அரசின் மானியம், சாகுபடி முறைகள், மகசூல், சிறுதானியங்களை எவ்வாறு விற்பனை செய்வது குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் விளக்கி பேசினர். முன்னதாக பூராண்டாம்பாளையத்தில் பிரசார வாகனங்களை முன்னோடி விவசாயி பி.வி.மகாலிங்கம், செஞ்சேரிமலையடிபாளையத்தில் முன்னோடி விவசாயிகள் செஞ்சேரி எம்.கே.முத்துமாணிக்கம், செஞ்சேரிப்புத்தூர் எஸ்.கே.டி.பழனிசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பிரசாரத்தில் கோவை வேளாண்மை துணை இயக்குனர் புனிதா, சுல்தான்பேட்டை வட்டார வேளாண்மை அலுவலர் குருசாமி, துணை வேளாண்மை அலுவலர் சந்தியாகு இருதயராஜ் மற்றும் வேளாண் அதிகாரிகள் பாக்யராஜ், மணியன், குமணன், செந்தில் வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.