< Back
மாநில செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சமரச மையம் குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சமரச மையம் குறித்து விழிப்புணர்வு

தினத்தந்தி
|
14 April 2023 12:15 AM IST

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சமரச மையம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

சமரச தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சமரச மையம் குறித்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் நீதிமன்ற கூட்டரங்கில் நடந்தது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கினார். சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், சார்பு நீதிபதியுமான அண்ணாமலை முன்னிலை வகித்தார். இதில் முதன்மை நீதிபதி பல்கீஸ், ஏனைய நீதிபதிகள், சமரசம் மைய தீர்வாளர்கள், வக்கீல்கள் சமரசம் மையம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். பின்னர் அவர்களுக்கு சமரசம் மையம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி கிராம மக்களிடம் வழங்குமாறு கேட்டு கொண்டனர்.

மேலும் செய்திகள்