பெரம்பலூர்
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
|சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குன்னம்;
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு மற்றும் விழுப்புரம் சாலை பாதுகாப்பு அலகு சார்பில் 'விபத்தில்லா தமிழ்நாடு எங்கள் பொறுப்பு' என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வையாபுரி தலைமை தாங்கினார். ஆசிரியர் தில்லை ராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், குன்னம் உட்கோட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன், பெரம்பலூர் கோட்ட பொறியாளர் கலைவாணி ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் ேதாழன் அமைப்பினர் சார்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை முறையாக இயக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட், சீட்டு பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். கண்டிப்பாக வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பது குறித்து பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழிமுறைகளை எடுத்துக்கூறப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதல் உதவி செய்வது என்பது குறித்தும் நேரடியாக மாணவிகளுக்கு செயல் முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த வினாடி-வினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.