< Back
மாநில செய்திகள்
வேளாண் குறித்து வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு
கரூர்
மாநில செய்திகள்

வேளாண் குறித்து வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு

தினத்தந்தி
|
27 April 2023 11:52 PM IST

வேளாண் குறித்து வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

லாலாபேட்டை பகுதியில் சிந்தலவாடி கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் வேளாண் அடுக்ககம் www.tnagrisnet.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்வது பற்றி விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை உள்பட 13 துறைகளில் இருந்து தமிழ்நாடு அரசு அளித்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒரே இடத்தில் பதிவு செய்ய ஏதுவாக வேளாண் அடுக்ககம் வலைதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்களது நில விவரங்களுடன், விவசாயிகளின் விவரங்களையும் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் தங்களது ஆவணங்களை நிரப்பி வருவாய் ஆய்வாளர் நசீமாபானு, கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோரிடம் கொடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்