< Back
மாநில செய்திகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தினத்தந்தி
|
29 Sept 2023 12:00 AM IST

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை சிறப்பிக்கும் விதமாக நம் தேசத்தில் உள்ள வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுற்றுப்புற தூய்மை குறித்தும், அதன் மாசுபாட்டால் ஏற்படும் சூழ்நிலை பாதிப்புகள் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை முதன்மை குடிமை மருத்துவர் சரவணன் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விழிப்புணர்வு குறித்து பேசினார். இதில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் சுற்றுச்சூழல் காப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்