< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
|5 July 2023 11:40 PM IST
டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடந்தது.
தோகைமலை கடைவீதியில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடந்தது. இதில் வட்டார மருத்துவர் தியாகராஜன் தலைமையில், சுகாதாரத்துறையினர் 10 கடைகளில் ஆய்வு செய்து, அங்கு வீணாக கிடந்த டயர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் உரல், கொட்டாங்குச்சி, தொட்டி போன்ற இடங்களில் மழைநீர் தங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.இதில், சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுச்சாமி, கண்ணன், ரகுநாத், சிவசக்திவேல், பிரசாத், சுகாதார களப்பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.