< Back
மாநில செய்திகள்
தர்மபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

தர்மபுரி போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலம் தர்மபுரியில் நடந்தது. 4 ரோடு அருகில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் ஏராளமான போலீசார் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலம் பைபாஸ் ரோடு வழியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது ஹெல்மெட் அணிவதும் நோக்கம் குறித்து பொது மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி, ரகு, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் சங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்