< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி
|18 May 2023 12:30 AM IST
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 2023- 2024-ம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான எல்.கே.ஜி. வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் 106 பேர் கலந்து கொண்டு 706 மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி, ஆசிரியர் பயிற்றுனர் சரவணன், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் தியாகு, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்ககூடிய பலன்கள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.