< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
ஒலிம்பியாட் போட்டிக்காக விழிப்புணர்வு முப்பரிமாண ஓவியம்
|21 July 2022 1:23 AM IST
ஒலிம்பியாட் போட்டிக்காக விழிப்புணர்வு முப்பரிமாண ஓவியம் வரையப்படுகிறது.
சென்னையில் நடைபெற உள்ள 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தில் 10 சிறந்த ஓவிய ஆசிரியர்களால் மிக பிரமாண்டமாக முப்பரிமாண ஓவியம் வரையப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில் மேஷ்ராம் நேரில் பார்வையிட்டார். மேலும் அவர் அமோனைட்ஸ் மையத்தினை பார்வையிட்ட பின்னர், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) கணபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.