< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு
|21 Sept 2023 1:00 AM IST
மொரப்பூர்:
தர்மபுரி கிழக்கு மாவட்டம் பசுமை தாயகம் சார்பில் கடத்தூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், சதீஷ்குமார், .நவீன்குமார், பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரசாங்கம் கலந்து கொண்டு காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் செல்வம், சின்னராஜ், பசுமை தாயக பொறுப்பாளர்கள் குமரேசன், மேற்கு ஒன்றிய தலைவர் சிவகுமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் பாரதி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.