புதுக்கோட்டை
யோகா ஆசிரியர்களுக்கு விருதுகள்
|யோகா ஆசிரியர்களுக்கு விருதுகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
புதுக்கோட்டை ஆத்மா அறக்கட்டளை சார்பில் சிறந்த யோகா ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மஹராஜ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் 22 யோகா ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார். விழாவில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும், பதக்கமும் வழங்கப்பட்டன. விழாவில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நெடுஞ்செழியன், ஆறுமுகம், நகர செயலாளர்கள் பாஸ்கர், சேட்டு, யோகா ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் மாதவன், பொதுசெயலாளர் அன்னராஜ், டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை ஆத்மா அறக்கட்டளை தலைவர் யோகா பாண்டியன், செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர்.