< Back
மாநில செய்திகள்
திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு

தினத்தந்தி
|
4 Feb 2023 12:15 AM IST

திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தது. இதையடுத்து 10 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. இதில் 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் சோதனை சாவடிகளில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் 17 ஆயிரத்து 395 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், 1,484 லிட்டர் மதுபாட்டில்கள், 529 லிட்டர் தமிழக மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 51 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 276 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தற்காலிக சோதனை சாவடிகளில் திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிசு வழங்கி பாராட்டினார்.

Related Tags :
மேலும் செய்திகள்