< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு விருது
|17 July 2022 12:24 AM IST
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.
கரூா் தளவாபாைளயம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு ஐசிடி அகாடமியால் பிரிட்ஜ் 22 என்ற நிகழ்ச்சியில் லேர்னதான் விருது வழங்கப்பட்டது. இவ்விருதானது இமேஜ் புரோசெசிங் ஆன்ராம்ப் யூசிங் மேட்லப் என்னும் பாடப்பிரிவில் அதிகபட்ச மாணவர்களின் சான்றிதழை கொண்ட சிறந்த வளாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிடி அகாடமியின் ஆட்டோடெஸ்க் மூலம் இயங்கும் வடிவமைப்புக்கான சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலம் இவ்விருதினை தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி.மனோதங்கராஜ் வழங்க, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் செயலாளர் முனைவர் கே.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் கட்டிடவியல் துறை தலைவர் செந்தில்குமார், இயந்திரவியல் துறை தலைவர் மோகன்ராஜ் மற்றும் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.