< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
தொட்டியம் பேரூராட்சி தலைவருக்கு விருது
|27 Jun 2023 12:50 AM IST
தொட்டியம் பேரூராட்சி தலைவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தொட்டியம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபுவுக்கு மக்கள்சேவைக்காக தளபதி விருது சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் முசிறி தொகுதி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் அவர் தொட்டியம் பேரூராட்சியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, துணைத் தலைவர் எஸ்.ஏ. எஸ்.ராஜேஷ், செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி கவுன்சிலர் சாந்திமோகன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பணியாளர்கள் உடன் சென்றனர்.