விருதுநகர்
சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பரிசு
|விருதுநகரில் நடந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு வழங்கினார்.
விருதுநகரில் நடந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு வழங்கினார்.
சிறந்த பணி
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களின் நடப்பு மாதத்திற்கான பணி ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த தாசில்தார்களில் சாத்தூர் தாசில்தார் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், சிவகாசி லோகநாதனுக்கு 2-வது பரிசும், ராஜபாளையம் தாசில்தார் சீனிவாசனுக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தனி தாசில்தார்களில் சாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தார் சீதாலட்சுமிக்கு முதல் பரிசும், சிவகாசி தனிதாசில்தார் சாந்திக்கு 2-வது பரிசும், அருப்புக்கோட்டை தனி தாசில்தார் சிவகுமாருக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.
பட்டா மாறுதல் மனுக்களை அதிக அளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை தாசில்தார்களில் திருச்சுழி சரவணகுமாருக்கு முதல் பரிசும், சாத்தூர் துணைத்தாசில்தார் ராஜாமணிக்கு 2-வது பரிசும், காரியாபட்டி கருப்பசாமிக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.
கள ஆய்வு
உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான மனுக்களை அதிக அளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை துணை ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு முதல் பரிசும், காரியாபட்டி கார்த்திகேயனுக்கு 2-வது பரிசும் சிவகாசி வட்ட துணை ஆய்வாளர் சுப்பாராஜாவுக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார் ஆய்வாளர் சுரேஷ் முதல் பரிசும், காரியாபட்டி வட்ட சார்ஆய்வாளர் கணேசன், ராஜபாளையம் வட்ட சார் ஆய்வாளர் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு 2-வது பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டி செல்வி, சாத்தூர் குறுவட்ட அளவர் ராதா ருக்குமணி ஆகியோருக்கு 3-வது பரிசும் கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், திட்ட அலுவலர் திலகவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.