தென்காசி
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
|செங்கோட்டை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது
செங்கோட்டை:
செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்-எனது குப்பை எனது பொறுப்பு-தமிழக அரசின் உத்தரவின்படி விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் அரசு பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு நகராட்சி தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளா் பார்கவி, மேலாளா் ரத்தினம், பொறியாளா் கண்ணன், கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் பழனிசாமி வரவேற்று பேசினார். இதையடுத்து செங்கோட்டை நகராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினா். நிகழ்ச்சியில் மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ராஜன், எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் சுதாகா், நகர்மன்ற உறுப்பினா்கள் பேபி ரெசவுபாத்திமா, முத்துப்பாண்டி, செண்பகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளா் கருப்பசாமி நன்றி கூறினார்.