< Back
மாநில செய்திகள்
3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
17 May 2024 2:25 PM IST

கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், 3 நாட்களுக்கு நீலகிரி வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நீலகிரி,

வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், அந்த 3 நாட்களில் நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மிக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 18, 19, 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியதாவது:- வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்து உள்ளதால், 3 நாட்கள் மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிர்த்தால் நன்றாக இருக்கும். இதனை மீறி வருபவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்