< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற அவினாசி மாணவர்கள்
|29 Aug 2022 12:41 AM IST
மாணவ, மாணவிகள் அனைவரும் தனித்தனியாக பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தமாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
திருப்பூர்,
நேபாளத்தில் கடந்த 24-ந்தேதி சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும் தனித்தனியாக பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தமாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இதையடுத்து அந்த மாணவர்கள் திருப்பூர் திரும்பிய நிலையில், வெள்ளியம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக பதக்கம் வென்றவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.