< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஆவின் நிர்வாகம் பால் தரத்தை உறுதி செய்ய வலியுறுத்தல்
|13 April 2023 12:15 AM IST
ஆவின் நிர்வாகம் பால் தரத்தை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது.
விருதுநகரில் நேற்று வினியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக புகார் கூறப்பட்டது. பால் பாக்கெட்டுகளை வாங்கிய நுகர்வோர் தங்களுக்கு வினியோகித்த ஆவின் முகவர்களை அழைத்து பால் பாக்கெட்டுகளை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினர்.
மேலும் தொடர்ந்து இம்மாதிரியான தரமில்லாத பால் பாக்கெட்டுகளை வினியோகிக்க வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தும் நிலை இருந்தது. எனவே ஆவின் நிர்வாகம் மாவட்டத்தில் வினியோகம் செய்யப்படும் பாலின் தரத்தை முறையாக உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.