அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட குழு அமைப்பு...!
|அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று பேச்சுவார்தை நடைபெற்றது.
மதுரை,
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடா்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து சமுதாயக் குழுக் கூட்டத்தை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்தை நடைபெற்றது.
மொத்தம் 62 பேர் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து சமூதாயத்தினர் கொண்ட 16 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ளவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கூட்டம் நிறைவடைந்ததும் வெளியே வந்த இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.