< Back
மாநில செய்திகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் உரிமையாளர்கள் உள்பட 10 பேர் காயம்
மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் உரிமையாளர்கள் உள்பட 10 பேர் காயம்

தினத்தந்தி
|
15 Jan 2023 9:31 AM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை உரிமையாளர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அவனியாபுரம்,

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக மைதானத்திற்கு வெளியே எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை காளை உரிமையாளர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்