< Back
மாநில செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மாநில செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
2 Sep 2022 10:11 AM GMT

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை ,ஆவணி, மார்கழி ,மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில் சித்திரை, மார்கழி ,மாசி ஆகிய மாத திருவிழாக்கள் தாணுமாலய சுவாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சுவாமிக்கும் நடைபெறுவது வழக்கம்.

அது போல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று மாலை 5 மணி அளவில் மரபு படி கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிபட்டதை மேளாதாளத்துடன் கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கொடியேற்றுவிழாவையொட்டி இன்று காலை 9 மணி அளவில் கோவிலில் கொடி பட்டத்தை கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மேலதாலத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து காலை 9.25 மணி அளவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்