< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா - விமரிசையாக நடைபெற்ற வீதி உலா
|20 Aug 2022 7:17 AM IST
ஆவணி திருவிழாவை முன்னிட்டு குமரவிடங்க பெருமானின் தங்க முத்துக்கிடா வாகன வீதி உலா விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகங்களும், திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஆவணி திருவிழாவின் மூன்றாவது நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.