< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
|6 Sept 2023 1:00 AM IST
பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து பத்ரகாளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.