< Back
மாநில செய்திகள்
மதனகோபாலசுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மதனகோபாலசுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி

தினத்தந்தி
|
30 Aug 2023 5:30 PM GMT

மதனகோபாலசுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் கொளக்காநத்தம் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதனை முன்னிட்டு கலச ஆவாகணம் செய்யப்பட்டு, பேரிடர், இயற்கை சீற்றங்களில் இருந்தும், பிணிகளில் இருந்து காத்து உலக சுபிட்சத்திற்காக மகரிஷிகளின் அருளை பெறவேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது. காண்டரிஷி சிறப்பு ஹோமம் மற்றும் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை லால்குடிமாந்துறை ராமகிருஷ்ணன் சாஸ்திரி நடத்தி வைத்தார். இதில் மாநில இணைச்செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி, மதனகோபாலசுவாமி கோவில் பரம்பரை ஸ்தானிகர் பொன்.நாராயணன், முன்னாள் பொருளாளர் சஞ்சீவிராவ் மற்றும் ரிக், யஜூர் வேதங்களை பின்பற்றும் திரளானபிராமணர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர். ஆவணி அவிட்டத்தை தொடர்ந்து காயத்ரி ஜெப வழிபாடு அந்தணர் வீடுகளில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு மதனகோபாலசுவாமி மற்றும் தாயாருக்கு பிராமணர் சங்கம் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. இதேபோல் பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்