< Back
மாநில செய்திகள்
ராயப்பேட்டை: மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோக்கள்  - சதி வேலையா ?
சென்னை
மாநில செய்திகள்

ராயப்பேட்டை: மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோக்கள் - சதி வேலையா ?

தினத்தந்தி
|
13 Jun 2022 7:18 AM IST

ராயப்பேட்டை அருகே மர்மமான முறையில் ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராயப்பேட்டை:

சென்னை ராயப்பேட்டை பேகம் மெயின் சாலையில் நேற்று முன்தினம் இரவு டிரைவர்கள் அங்கு தங்களது ஆட்டோக்களை நிறுத்தியிருந்தனர். நேற்று அதிகாலை அங்கு நிறுத்தி இருந்த 3 ஆட்டோக்கள் மர்மமான முறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அந்த பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளே தண்ணீரை ஊற்றி ஆட்டோக்களில் எரிந்த தீயை அணைத்தனர். இதில் ஆட்டோக்களின் மேற்கூரைகள், டயர் போன்றவை எரிந்து நாசமானது.

இதுபற்றி ஐஸ்-அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோக்கள் தானாக எரிந்ததா? அல்லது ஏதேனும் சதிவேலையா என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்