< Back
மாநில செய்திகள்
ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்
கடலூர்
மாநில செய்திகள்

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்

தினத்தந்தி
|
20 May 2023 12:15 AM IST

பண்ருட்டி அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்

புதுப்பேட்டை

ஆட்டோக்கள் மோதல்

பண்ருட்டியை அடுத்துள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஞ்சுகம் (வயது 28), சுதா (50), ஜோதி (55), பானு உள்பட 11 பெண்கள் விவசாய கூலி வேலைக்காக ஆட்டோவில் மணப்பாக்கத்தில் இருந்து செம்மேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். மணப்பாக்கத்தை சேர்ந்த ஹரிஷ்(21) ஆட்டோவை ஓட்டினார்.

எஸ்.ஏரிப்பளையம் சாலையில் வளைவில் வந்தபோது எதிரே அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஜானகிராமன்(45) ஓட்டி வந்த ஆட்டோவும், ஹரிஷ் ஓட்டி வந்த ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

13 பேர் காயம்

இதில் ஆட்டோ டிரைவர்கள் ஹரிஷ், ஜானகிராமன் மற்றும் 11 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை போலீசார் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறாா்கள்.

இந்த விபத்து தொடர்பாக இரு ஆட்டோ டிரைவர்கள் மீதும் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆட்டோ டிரைவர்கள் ஓட்டுனர் உரிமம், முறையான வாகன உரிமம் இல்லாமல் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் செல்வதால் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடி ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்