< Back
மாநில செய்திகள்
ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 Oct 2022 11:14 PM IST

வேலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆல்வின், பொருளாளர் ஏழுமலை, துணைச் செயலாளர் மாணிக்கம், துணைத்தலைவர் லோகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன மசோதாவை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தால் அரசு போக்குவரத்து துறையை தனியார்மயமாக்க கூடாது. ஆட்டோ டிரைவர்களுக்கு தெரியாமலேயே ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சேகர், உமாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்