< Back
மாநில செய்திகள்
சரக்கு வேனில் இருந்த ரூ.20 லட்சம் வாகன உதிரிபாகங்கள் திருட்டு
திருச்சி
மாநில செய்திகள்

சரக்கு வேனில் இருந்த ரூ.20 லட்சம் வாகன உதிரிபாகங்கள் திருட்டு

தினத்தந்தி
|
26 Jun 2023 1:42 AM IST

சரக்கு வேனில் இருந்த ரூ.20 லட்சம் வாகன உதிரிபாகங்கள் திருட்டு போனது

சமயபுரம்:

தென்காசி பகுதியை சேர்ந்தவர் சிவராஜா (வயது 37). இவர் சென்னையில் உள்ள லாரி கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந்தேதி சிவராஜா சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு சரக்கு வேனில் இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். சிறுகனூர் அருகே இரவில் வேனை நிறுத்திவிட்டு அதன் அருகிலேயே தூங்கினார். பின்னர் மறுநாள் காலையில் வேனை ஓட்டிக்கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார். திருச்சியில், வேனை நிறுத்தி பார்த்தபோது, அதில் 49 அட்டைப்பெட்டியில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்