< Back
மாநில செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

தினத்தந்தி
|
22 Jan 2023 2:48 AM IST

ராதாபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் இறந்தார்.

ராதாபுரம்:

நாகர்கோவில் அருகே உள்ள செண்பராமன்புதூரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். கடந்த 18-ந் தேதி நாகேந்திரன் தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

ராதாபுரம் அருகே பெத்தரெங்கபுரம் பாலத்தில் வந்த போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த நாகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். மற்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்