< Back
மாநில செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

தினத்தந்தி
|
26 Dec 2022 2:02 AM IST

நாங்குநேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் இறந்தார்

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் இறந்தார்.

ஆட்டோ டிரைவர்

நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை ஏர்வாடியில் இருந்து நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரும்பத்து இந்திரா நகர் அருகே வந்தபோது ஆட்டோ திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

சாவு

இதில் பலத்த காயம் அடைநாங்குநேரி அருகே

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்