திருப்பத்தூர்
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
|வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார். 3 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார். 3 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
ஜோலார்பேட்டையை அடுத்த மாராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷு கம்பெனியில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் 6 பேர் காவேரிபட்டு கிராமத்தில் இருந்து ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த மேகநாதன் (வயது 50) ஓட்டி வந்தார்.
வாணியம்பாடி பெருமாள் பேட்டை பை பாஸ் சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் மேகநாதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
6 பேர் காயம்
ஆட்டோவில் பயணம் செய்த பெண் தொழிலாளர்கள் 3 பேருக்கு பலத்த காயமும், 3 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வாணியம்பாடி டவுன் போலீசார் மேகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.