கன்னியாகுமரி
நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
|சுசீந்திரம் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் டிரைவர் இறந்தார். 3 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் டிரைவர் இறந்தார். 3 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஆட்டோ கவிழ்ந்தது
மருங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பகவதியப்பன் (வயது 48), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலையில் மருங்கூரில் இருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.
ஆட்ே்டாவில் பயணிகள் சதீஷ் (25), தனலெட்சுமி (44), ஆனந்தி (20) ஆகியோர் சென்றனர். சுசீந்திரம் அருகே நல்லூர் ரேஷன் கடை பகுதியில் ஆட்டோ வந்தபோது சாலையின் குறுக்கே நாய் பாய்ந்தது. அது ஆட்டோவின் முன் சக்கரத்தில் சிக்கியது. இதனால் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது.
டிரைவர் சாவு
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சுசீந்திரம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
்அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற ஆட்டோ டிரைவர் பகுதியப்பனை மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு பகவதியப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். பயணிகள் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து பகவதியப்பனின் மனைவி செல்வி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுசீந்திரம் போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.