< Back
மாநில செய்திகள்
ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
சென்னை
மாநில செய்திகள்

ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
1 Aug 2023 11:13 AM IST

புதுவண்ணாரப்பேட்டை,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வம் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை வீ்ட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாயின.

இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ, மோட்டார்சைக்கிள் தானாக தீப்பிடித்து எரிந்ததா? அல்லது மர்மநபர்கள் யாராவது வேண்டும் என்றே தீ வைத்து எரித்தார்களா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்