< Back
மாநில செய்திகள்
மரத்தின் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

மரத்தின் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி

தினத்தந்தி
|
24 Sept 2022 12:15 AM IST

செஞ்சி அருகே மரத்தின் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி

செஞ்சி

செஞ்சி பீரங்கிமேடு பகுதியை சேர்ந்தவர் வேணு. இவரது மகன் சேகர்(வயது 58). ஆட்டோ டிரைவரான இவர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றி கணக்கன்குப்பம் கிராமத்தில் கொண்டு இறக்கி விட்டு மீண்டும் செஞ்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். சவுட்டூர் என்ற இடத்தின் அருகே வந்தபோது நாய் குறுக்கே சென்றதால் சேகர் திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையோரத்தில் நின்ற மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்