< Back
மாநில செய்திகள்
ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிடும் போராட்டம் தள்ளிவைப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிடும் போராட்டம் தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
30 Sept 2023 11:32 PM IST

போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிடும் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை நகர பகுதியில் ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீசார் ஆன்லைன் முறையில் அபராதம் விதிப்பதை கண்டித்து நகர போக்குவரத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் போராட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா மற்றும் நிர்வாகிகள், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். நகரில் ஆட்டோக்களை செல்போனில் போட்டோ எடுத்து தேவையில்லாமல் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அவ்வாறு அபராதம் விதிக்கப்படும் போது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வருவது அதிகரித்துள்ளதாகவும், இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதில் மறைமுகமாக ஆன்லைன் அபராத விதிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து இன்று நடைபெற இருந்த போராட்டத்தை தொழிற்சங்கத்தினர் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்