< Back
மாநில செய்திகள்
ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 Dec 2022 1:34 AM IST

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செயலியில் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் இயக்கப்படும் மீட்டர் ஆட்டோ சேவைக்கு திருச்சி மாவட்டத்தில் தடை விதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ டிரைவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ராஜாமுகமது தலைமை தாங்கினார். செயலியில் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் இயக்கப்படும் மீட்டர் ஆட்டோ சேவையை தடை செய்யவேண்டும், கேரளாவை போல் தமிழகத்திலும் ஆட்டோ டிரைவர்களுக்கு என செயலியை உருவாக்க வேண்டும், 10 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கும் மீட்டர் கட்டணத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்