< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பைக் டாக்ஸி டிரைவர்களை விரட்டி விரட்டி கல்லால் தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
|1 April 2023 2:04 PM IST
சென்னை கோயம்பேட்டில் பைக் டாக்சி ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கற்களால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியே பைக் டாக்சி ஓட்டுநர்கள் நின்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு தகாத வார்த்தைகளால் பேசி கற்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பைக் டாக்சி ஓட்டுநர்கள் காயமடைந்ததாக தெரிகிறது. இதனிடையே ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார் கொடுக்க வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை தாக்குவதாகவும், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.