< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் மதங்களைக் கடந்து ஆயுத பூஜை கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர்கள்
|4 Oct 2022 10:22 PM IST
ரிஷிவந்தியத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையை ஒற்றுமையுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து ஒற்றுமையாக ஆயுத பூஜையை கொண்டாடினர். ஆட்டோக்களுக்கு மாலையிட்டு, வாழை மரம் கட்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மேலும் அவல், பொரிகடலை, சுண்டல், சக்கரை பொங்கல் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கி ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாடினர். இந்த விழாவில் ரிஷிவந்தியம் பயிற்சி உதவி ஆய்வாளர் விமல் குமார் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்றார்.