திருச்சி
மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் சாவு
|மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
மணிகண்டம்:
மணிகண்டம் அருகே உள்ள பாத்திமா நகரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 63). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவில் பாத்திமா நகரில் இருந்து எடமலைப்பட்டிபுதூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அதே ஆட்டோவில் மீண்டும் பாத்திமா நகருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். சேதுராப்பட்டி பிரிவு ரோடு அருகே வந்தபோது, அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு நடந்து சென்று உணவு வாங்கிவிட்டு, சாலையை கடக்க முயன்றார். அப்போது பாத்திமா நகரை சேர்ந்த பீட்டர் மகன் பெனியல் (வயது 23) ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் தேவதாஸ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவதாசை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திராவியராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.