சென்னை
எழும்பூரில் லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
|எழும்பூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
சென்னை பெரம்பூர், திருநாவுக்கரசு தெருவை சேர்ந்தவர் குமார் என்ற லவகுமார் (வயது 60). ஆட்டோ டிரைவரான இவர், எழும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 11-ந்தேதி வீட்டில் இருந்து ஆட்டோவில் எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் வந்தபோது, அவருக்கு எதிரே வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரே வந்த ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில், ஆட்டோ டிரைவர் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குமார், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.