< Back
மாநில செய்திகள்
விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி

தினத்தந்தி
|
24 Dec 2022 12:30 AM IST

வேடசந்தூர் அருகே கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.

வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் கண்ணன் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேடசந்தூரில் இருந்து நாகம்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே அந்த வழியாக சென்ற கார், செந்தில் கண்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் டி.அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (33) என்பவரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்