< Back
மாநில செய்திகள்
தலையணையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தலையணையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

தினத்தந்தி
|
17 April 2023 2:58 AM IST

பாபநாசம் தலையணையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் தலையணையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் இறந்தார்.

குளிக்க தடை

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் இப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை செய்யப்பட்டது. இதன் ஆபத்தை உணர்ந்த உள்ளூர்வாசிகள் மிக கவனத்துடன் குளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த திருவண்ணாமலை சன்னதி தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் அய்யப்பன் (வயது 42) அங்கு வந்தார்.

மூழ்கி சாவு

இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை தனது உறவினர்கள் 7 பேருடன் பாபநாசம் வந்து தலையணையில் குளிக்கச் சென்றனர்.

அய்யப்பனுக்கு நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதியில் மூழ்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார்.

இது பற்றி தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன அய்யப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்