< Back
மாநில செய்திகள்
படப்பையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

படப்பையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
26 Sept 2023 6:42 PM IST

படப்பையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது46). ஆட்டோ டிரைவரான இவர், படப்பை ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை லட்சுமிபதி வீட்டின் கதவு மூடிய நிலையில் இருந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், லட்சுமிபதி திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணிமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்