< Back
மாநில செய்திகள்
மேஸ்திரி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மேஸ்திரி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

தினத்தந்தி
|
15 Oct 2023 12:12 AM IST

ரத்தினகிரி அருகே நடந்த மேஸ்திரி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரியை அடுத்த டி.சி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. அதேப்பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (32), ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணனை, கிருபாகரன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ரத்தனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவர் கிருபாகரனை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை டி.சி.குப்பத்தை அடுத்த நத்தம் பகுதியில் உள்ள தனது நிலத்தில் கிருபாகரன் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்