< Back
மாநில செய்திகள்
ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது

தினத்தந்தி
|
23 Oct 2022 12:15 AM IST

ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நாகா்கோவில்:

ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள்.

அதில் 5 மூடைகளில் 200 கிலோ ரேஷன் அாிசி பதுக்கி வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஆட்டோவுடன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடா்பாக ஆட்டோ டிரைவர் பத்மநாபபுரம் ஆர்.சி. தெருவை சேர்ந்த பிஜூ என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்