< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
|13 March 2023 10:30 AM IST
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை சென்டிரல், மூர் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர், ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள கடையில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதற்கிடையில் சிறுமி மாயமானார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் மாயமான சிறுமி திருவேற்காட்டில் இருப்பதும், மகேஸ்வரன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்று கர்ப்பமாக்கியதும் தெரிந்தது. மேலும் மகேஸ்வரனை பிடித்து விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
மகேஸ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.